காட்டுப்புத்தூர்-கொல்லை மேட்டுப்பகுதி

அமைவிடம் - காட்டுப்புத்தூர்-கொல்லை மேட்டுப்பகுதி
ஊர் - காட்டுப்புத்தூர்
வட்டம் - உத்தரமேரூர்
மாவட்டம் - காஞ்சிபுரம்
வகை - கற்திட்டை
கிடைத்த தொல்பொருட்கள் - கற்திட்டை
பண்பாட்டுக் காலம் - பெருங்கற்காலம்
கண்டறியப்பட்ட காலம் - பொ.ஆ.2021
கண்டறிந்த நிறுவனம்/நபர் -

உத்தரமேரூர் வரலாற்று ஆய்வு மையம்

விளக்கம் -

காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் வட்டத்திற்கு உட்பட்ட காட்டுப்புத்தூர் கிராமத்தில் சுமார் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பெருங்கற்கால வகையை சேர்ந்த கற்திட்டை என்ற ஈமச்சின்னம் கண்டறியப்பட்டுள்ளது. பொதுவாக கற்திட்டைகள் பலகைக் கல்லில் அமைக்கப்படும். ஆனால் இக்கற்திட்டை காலத்தால் முந்தியது. எனவே உருளை பாறைக் கற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. எனவே இக்கற்திட்டை ஒரு முன்னோடி கற்திட்டை எனக் கருத இடமுண்டு.

ஒளிப்படம்எடுத்தவர் - உத்தரமேரூர் வரலாற்று ஆய்வு மையம்
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் - தமிழ் இணையக் கல்விக் கழகம்
சுருக்கம் -

காஞ்சிபுரம் அருகே காட்டுப்புத்தூர் கிராமத்தில் அக்கிராமத்தின் ஒரு பகுதியான கொல்லைமேட்டுப் பகுதியில் புதர்களுக்கிடையே கல்திட்டை ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. இக்கற்திட்டையை இவ்வூர் மக்கள் கோட்டைக்கல் என்கிறார்கள்